பயங்கரவாதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்தால், பாகிஸ்தான் தனது வரைபட இருப்பை இழக்க நேரிடும் என இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானின் அனூப்கரில் உள்ள இராணுவப் பாசறையில் பேசிய ஜெனரல் திவேதி, பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்த மறுத்தால், இந்திய படைகள் இம்முறை எந்தவிதமான கட்டுப்பாட்டையும் விதிக்காது என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
முன்னர் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர் 1.0'-ல் கடைப்பிடித்த கட்டுப்பாட்டை இனிமேல் கடைப்பிடிக்க மாட்டோம் என்று ஜெனரல் திவேதி கூறினார்.
பாகிஸ்தான் தனது இடத்தை வரைபடத்தில் தக்கவைத்து கொள்ள வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும் ஒரு நடவடிக்கையை நாங்கள் செய்வோம். பாகிஸ்தான் வரைபடத்தில் தனது இடத்தை வைத்துக்கொள்ள விரும்பினால், அது அரசு ஆதரவிலான பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்," என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.
இந்திய ராணுவ தளபதியின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.