Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்.. இந்திய அணி வெற்றிக்கு மோடி வாழ்த்து..!

Advertiesment
ஆசிய கோப்பை

Siva

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (07:36 IST)
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த மகத்தான வெற்றியை, பிரதமர் நரேந்திர மோடி 'ஆபரேஷன் சிந்துர்' என்று குறிப்பிட்டு, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
"விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்' இது. விளைவு ஒன்றுதான் - இந்தியா வென்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டார்.
 
'ஆபரேஷன் சிந்துர்'  கடந்த மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலைக் குறிக்கிறது. அந்தத் தாக்குதல், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறுகிய காலத்தில் செயலிழக்க செய்தது. இந்த இராணுவ நடவடிக்கையை, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் வெற்றிக்கு ஒப்பிட்டு பிரதமர் மோடி பதிவிட்டது, விளையாட்டு அல்லது இராணுவம் என எதுவாக இருந்தாலும், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதை உணர்த்துகிறது.
 
பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு போராக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை வீழ்த்துவது இந்தியாவின் வழக்கம் என உணர்ச்சி பொங்க பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?