Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

Advertiesment
Operation sindoor ganesha

Prasanth K

, புதன், 27 ஆகஸ்ட் 2025 (10:06 IST)

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், மக்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தெருவிலும் தெருவாசிகள் சேர்ந்து பிரம்மாண்டமான பெரிய விநாயகர் சிலைகளை வாங்கி தெரு முக்கில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

 

இதற்காகவே விதவிதமாக பல விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வருகின்றன. அந்தந்த கால ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப கேஜிஎஃப் விநாயகர், புல்லட் விநாயகர் என பல விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அவ்வாறாக இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

 

இந்த ஆண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலும், அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் அதிரடி தாக்குதலும் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆபரேஷன் சிந்தூரை நினைவுக்கூரும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விநாயகர் சிலையை அமைத்துள்ளனர் ஏரல் மக்கள். நான்கு கைகளை கொண்ட விநாயகர் ராணுவ உடையில் இரு கைகளில் துப்பாக்கியையும் மீத இரு கைகளில் தேசியக் கொடியையும் ஏந்தி நிற்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையின் தலையை கவ்விச்சென்ற தெருநாய்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்..!