ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம், பாலஸ்தீன கால்பந்து வீரர் சுலைமான் அல்-அஜூரி கொல்லப்பட்ட விவகாரத்தில், கண்டனம் தெரிவிக்காமல் வெறும் இரங்கல் மட்டுமே தெரிவித்ததற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
"பாலஸ்தீன பீலே" என அழைக்கப்பட்ட சுலைமான் அல்-அஜூரி என்றா கால்பந்தாட்ட வீரர், இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு UEFA ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
UEFA-வின் இந்த நடவடிக்கைக்கு கால்பந்து ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உணவு பொருட்களை வாங்க வரிசையில் காத்திருந்த ஒரு மனிதன் இரக்கமின்றிக் கொல்லப்பட்டதை, UEFA கண்டிக்க தவறியது ரசிகர்களின் கோபத்துக்கு முக்கிய காரணம். பாதிக்கப்பட்டவருக்கு இரங்கல் தெரிவிப்பது ஒருபுறம் இருந்தாலும், இத்தகைய வன்முறையை வெளிப்படையாக கண்டிப்பதே ஒரு பொறுப்புள்ள அமைப்பின் கடமை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சம்பவம், விளையாட்டு அமைப்புகள் அரசியல் மற்றும் சமூக பொறுப்புகளில் இருந்து விலகி இருக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.