Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் - காசா போரும் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் எடுத்த முக்கிய முயற்சி..!

Advertiesment
Trump

Siva

, புதன், 2 ஜூலை 2025 (12:45 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த, ஈரான் ஆதரவு ஹமாஸ் போராளிக் குழு ஒரு 'இறுதி முன்மொழிவை' ஏற்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான 60 நாள் போர் நிறுத்தத்திற்கான யோசனையை, கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்த அதிகாரிகள் ஹமாஸிடம் வழங்குவார்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பதிவில், காசா நிலவரம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தனது பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் 60 நாள் போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பேச்சுவார்த்தையின் இறுதி முன்மொழிவை" ஹமாஸிடம் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"மத்திய கிழக்கின் நலனுக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இதைவிட சிறந்த ஒரு வாய்ப்பு அமையாது என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
 
போரை முடிவுக்கு கொண்டுவந்தால் மீதமுள்ள பிணையாளிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் கூறி வருகிறது. அதே சமயம், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது. எனவே இஸ்ரேல் - காசா போரும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்பு கேட்க மறுத்த எம்.எல்.ஏ அருள்! பாமகவை விட்டு நீக்கிய அன்புமணி! - ராமதாஸ் ரியாக்‌ஷன் என்ன?