பாலஸ்தீனிய பீலே' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்-குய்யித், காசா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
சுலைமான் அல்-குய்யித், உதவிக்காக க்ஷ்நிவாரண முகாமில் காத்திருந்தபோது, காசாவை நோக்கி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்தார் என்று பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம், விளையாட்டு வீரர்கள்கூட போரின் கோர விளைவுகளில் இருந்து தப்ப முடியவில்லை என்பதை உணர்த்துகிறது.
இந்தச் செய்தி, விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.