அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பிற்காக, கூகுளின் யூடியூப் நிறுவனம் அவருக்கு $24.5 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் ₹217 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, ட்ரம்பின் சமூக ஊடக கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. அவரது யூடியூப் சேனலும் இதில் அடங்கும்.
இதை எதிர்த்து, தனது கணக்கு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு கோரி ட்ரம்ப் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இழப்பீட்டுத் தொகை $24.5 மில்லியன் யூடியூப் டிரம்புகு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் டிரம்புக்கு வரும் பணத்தில் இருந்து $22 மில்லியன் தொகை 'நேஷனல் மால் டிரஸ்ட்' என்ற அமைப்புக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.