இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தங்களின் முதல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இறுதி போட்டியில் இந்தியா 298/7 ரன்கள் குவிக்க, தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷஃபாலி வர்மா 87 ரன்களும், 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆட்ட நாயகி ஆனார்.
ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வுல்வார்ட் (101 ரன்கள்) விக்கெட்டை, வீராங்கனை அமன்ஜோத் கவுர் அபாரமாக பிடித்த கேட்ச் ஆகும்.
இந்த வெற்றிக்கு பின், அமன்ஜோத்தின் தந்தை பூபிந்தர் சிங் ஒரு உருக்கமான தகவலை வெளியிட்டார்: உலகக் கோப்பைத் தொடர் நடந்துகொண்டிருந்தபோது, அமன்ஜோத் கவுரின் பாட்டி பகவந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வீராங்கனை ஆட்டத்தில் கவனம் சிதறாமல் இருப்பதற்காக, இந்த செய்தி அவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று அமன்ஜோத்தின் தந்தை பூபிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
"என் தாய் பகவந்தி, பாட்டி அமன்ஜோத் ஆகிய இருவரும் தெருவிலும் பூங்காவிலும் விளையாட தொடங்கிய நாள் முதல் உறுதூணாக இருந்தார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட நாங்கள் அமன்ஜோதிடம் சொல்லவில்லை. இந்த உலக கோப்பை வெற்றி, எங்கள் குடும்பத்தின் பதற்றமான சூழலுக்கு கிடைத்த சுகமளிக்கும் மருந்தாக அமைந்துள்ளது," என்று அமன்ஜோத்தின் தந்தை பூபிந்தர் சிங் உருக்கமாக பேசியுள்ளார்