Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவை கண்டித்துவிட்டு ரஷ்யாவுடன் கொல்லைப்புற டீல்! - அமெரிக்க குட்டு அம்பலம்!

Advertiesment
US Russia deal

Prasanth K

, புதன், 27 ஆகஸ்ட் 2025 (09:34 IST)

ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிகத்தை கண்டித்து வரியை அதிகரித்துள்ள அமெரிக்கா, ரகசியமாக ரஷ்யாவிடம் டீல் பேசியது அம்பலமாகியுள்ளது.

 

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்கா முயன்று வருகிறது. முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்ததற்காக ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதை மீறியும் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகவும், உக்ரைன் போருக்கு இந்தியாவின் வணிகமே காரணம் என்றும் கம்பு சுற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன் மேலும் 25 சதவீத வரியை விதித்தார்.

 

நட்பு நாடான இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக இந்தியாவை கண்டித்துவிட்டு கொல்லைப்புறமாக சென்று ரஷ்யாவிடம் வணிக டீல் பேசியுள்ளது அமெரிக்கா. சமீபத்தில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்துக் கொண்டனர். 

 

அப்போது ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம், பணி பாலங்களை உடைக்கும் ஐஸ் ப்ரேக்கர் கப்பல்களை வாங்குவது உள்ளிட்ட சில வணிக பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பெருங்கடலில் இறங்கிய ஸ்டார்ஷிப்! 10வது சோதனையில் வெற்றி!