ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் சோதனை 10வது முறையில் வெற்றிப் பெற்று பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து மனிதர்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்புவது உள்ளிட்ட பல ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக செய்து வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டங்களில் ஒன்று மனிதர்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் அழைத்துச் செல்வது.
இதற்காக மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்கலத்தை விண்ணில் ஏவி மீண்டும் பத்திரமாக நிலைநிறுத்தும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் விண்கலம் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளாகி வந்தது.
இதுவரை 9 முறை ஸ்டார்ஷிப் விண்கலம் தோல்வியடைந்த நிலையில் நேற்று 10வது முறையாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வெற்றிகரமாக புறப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் திட்டமிட்டப்படி இந்திய பெருங்கடலின் குறிப்பிட்ட இலக்கில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த வெற்றி மூலம் விண்வெளி பயணத்திற்கான வலுவான அடியை எடுத்து வைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
Edit by Prasanth.K