Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ பாட்ஷான்னா நான் ஆண்டனி! எண்ணி 7 செகண்ட்ல தூக்கிடுவேன்! - சீனாவை சீண்டிய ட்ரம்ப்!

Advertiesment
Trump Xi jingping

Prasanth K

, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (12:57 IST)

அமெரிக்காவிற்கு அரியவகை தனிமங்களை கொடுப்பதற்கு சீனா மறுத்தால் அதற்கு அதிக வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலாக டொனால்டு ட்ரம்ப் உலகளாவிய நாட்டாமையாக தன்னை பாவித்துக் கொண்டு எடுத்து வரும் நடவடிக்கைகள் உலக நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை பெரிதும் பாதித்துள்ளது. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த ட்ரம்ப், இந்தியாவிற்கு விதித்துள்ள 50 சதவீத வரியை அமெரிக்காவில் உள்ள பலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்தில் சீன காந்த தயாரிப்புக்கான அரிய வகை தனிமங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இதனால் கடுப்பான ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அந்த கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்க வேண்டும் என கூறி வந்தார். ஆனால் அதற்கு சீனா செவி சாய்க்காததால் எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ள ட்ரம்ப் “சீனா அரியவகை தனிமங்களை விநியோகிக்காவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம். அமெரிக்காவால் சீனாவை அழிக்க முடியும். ஆனால் அதை செய்ய மாட்டோம்” என பேசியுள்ளார்.

 

முன்னதாக அமெரிக்கா பரஸ்பர வரி விதித்தபோது, பதிலுக்கு சீனா வரி விதிக்க இரு நாடுகளிடையே வர்த்தக மோதல் ஏற்பட்டு பின்னர் பேச்சுவார்த்தை காணப்பட்டது. இந்தியாவிற்கும் அரியவகை தனிமங்கள் ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு விதித்திருந்த சீனா சமீபத்திய நட்புறவால் இந்தியாவிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவிற்கு தளர்வு இல்லை. மேலும் இந்தியாவை வரி மூலமாக அமெரிக்கா கட்டுப்படுத்த நினைத்தால், இந்தியாவிற்கு ஆதரவாக நிற்போம் என ஏற்கனவே சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் 50% வரி போட்டாலும் இந்த ஒரு பொருள் மட்டும் விலை ஏறாது.. எந்த பொருள் தெரியுமா?