இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள செம்மணி என்ற பகுதியில் உள்ள ஒரு புதைகுழியிலிருந்து நான்கு முதல் ஐந்து வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் யார், பள்ளிச் சிறுமிகளா, பெற்றோர்களிடமிருந்து பிரித்து கடத்தப்பட்டவர்களா? அல்லது இலங்கை போரின்போது காணாமல் போனவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், எலும்புக்கூடுகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்ததாக நேரில் பார்த்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், கொல்லப்பட்டவர்கள் புதைகுழியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது நான்கு முதல் ஐந்து வயதுடைய 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் புதைகுழியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு ஈழப் போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் கூறப்பட்ட நிலையில், இது போன்ற புதைகுழிகளில் கொலை செய்து வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.