சுந்தர் சி வெளியேற்றம்… ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாராக இருக்கும்?

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (11:18 IST)
கடந்த வாரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார்.

இப்போது சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகியது உறுதியாகியுள்ள நிலையில் அந்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், ஹெச் வினோத் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் ரஜினிக்கு கடந்த காலங்களில் கதை சொல்லியுள்ளனர். அவர்களில் யாராவது ஒருவரை ரஜினி தேர்ந்தெடுக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் சிலரோ ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் அந்த படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்துக்குக் காலாவதி தேதி வேண்டும்… நடிகை கஜோல் பேச்சு!

மருத்துவமனையில் தர்மேந்திராவை ரகசியமாக வீடியோ எடுத்த ஊழியர் கைது!

சுந்தர் சி வெளியேற்றம்… ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாராக இருக்கும்?

சம்பளமே வாங்காம 20 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா!.. பிரபலம் பேட்டி!..

பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments