கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரஜினி நடிக்கப் போகும் படத்தை சுந்தர்.சி இயக்கப் போகிறார் என சமீபத்தில் அறிவித்தார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் கமல், ரஜினி, சுந்தர்.சி ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார்கள்.
கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வரும் ரஜினி சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பது நல்லதுதான், ஏனெனில் காமெடி செய்யும் ரஜினியை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என ரசிகர்களும் ஆசைப்பட்டார்கள். ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என அவர் சொல்லவில்லை. அதேநேரம் நான் ரஜினி, கமல் ஆகிய இருபெரும் துருவங்களை மிகவும் மதிக்கிறேன். அவர்களின் வழிகாட்டுதல்படி நடப்பேன். எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் சுந்தர்.சி.
சுந்தர்.சி தன் படத்தில் நடிக்கும் நடிகருக்கு முழு கதையையும் சொல்ல மாட்டார். ஒரு வரி கதை மட்டுமே சொல்வார். அவரை நம்பி நடிகர் தன்னை ஒப்படைத்தால் படத்தை சிறப்பாக எடுத்து ஹிட் கொடுத்து விடுவார். அதோடு குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுக்கும் இயக்கும் சுந்தர்.சி.
எனவேதான் ரஜினி, கமல் அவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் திடீரென அந்த படத்திலிருருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இதற்கான காரனங்கள் குறித்து திரையுலகில் பேசப்பட்டுவது , ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு சுந்தர்.சி இரு கதைகளுக்கான லைனை கூறியுள்ளார். ஆனால் அந்த கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். கமல்ஹாசனின் விருப்பத்திற்காகவே அவர் சம்மதித்தார் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் ரஜினியிடமும் கமலிடம் கண்டிப்பாக சுந்தர் சி முழுக்கதையை சொல்லியாக வேண்டும். ஒருவேளை இதுதான் சுந்தர் சிக்கு நெருடலை ஏற்படுத்தியதா? என தெரியவில்லை. காரணம் சுந்தர்.சிக்கு கோர்வையாக கதை சொல்ல வராதாம் . இது குறித்து ஆவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஏனெனில் வேறு சில சின்ன காரணங்களுக்காக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பிலிருந்து சுந்தர்.சி விலகியிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.