பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (09:29 IST)
துல்கர் சல்மான் , பாக்யஸ்ரீ போர்ஸ் சமுத்திரக்கனி மற்றும் ராணா ஆகியோர் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள படம் ‘காந்தா’நேற்று ரிலீஸானது.  பேன் இஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.  படம் வெளியாகி பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க 1950களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் துல்கர் சல்மான், நடிப்பு சக்ரவர்த்தி டி கே மகாதேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெரிய ஸ்டார் நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குனருக்கும் இடையே நடக்கும் மோதலாக உருவாகியுள்ளது இந்த படம்.  பல இடங்களில் ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடிப்பு, வசனம் என அனைத்திலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் இந்திய அளவில் 4 கோடி ரூபாயை வசூலித்துள்ளது காந்தா. இது துல்கரின் முந்தைய படமான ‘லக்கி பாஸ்கர்’-ன் முதல் நாள் வசூலை விடக் குறைவுதான். லக்கி பாஸ்கர் முதல் நாளில் 6.75 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

”நீ தவறான படம் செய்ய எந்தக் காரணமும் இல்லை…” –மம்மூட்டியின் அட்வைஸைப் பகிர்ந்த துல்கர்!

’ஒடிசே’ படமாக்களுக்கு 20 லட்சம் அடி பில்ம் ரோல்களைப் பயன்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்…!

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments