Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

Advertiesment
Kamalhaasan

vinoth

, வெள்ளி, 14 நவம்பர் 2025 (10:02 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் வாலி  ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இவற்றில் உச்சமாக விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

இதையடுத்து கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி அவரின் ‘நாயகன்’ திரைப்படம் ரி ரிலீஸாகி வெற்றி பெற்றது. இதையடுத்து அவரின் இன்னொரு சூப்பர் ஹிட் படமான ‘தேவர் மகன்’ படத்தையும் ரி ரிலீஸ் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தை டிஜிட்டலில் மெருகேற்றும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?