Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Advertiesment
சிம்பு

vinoth

, திங்கள், 24 நவம்பர் 2025 (10:18 IST)
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள ‘அரசன்’படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த முன்னோட்டக் காட்சியிலேயே ‘வடசென்னை’ உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்த படம் வடசென்னை பின்னணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதைக்களத்தை மதுரை மற்றும் கோவில்பட்டி போன்ற தென் தமிழக பின்னணிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் கோவில்பட்டியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!