அட்லி இயக்கத்தில் இதுவரை வெளியாகி இருப்பது ஐந்தே படங்கள்தான். ஆனால் அந்த படங்களின் வெற்றி காரணமாக இன்று இந்திய அளவில் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது; சாய் அப்யங்கர் இசையமைக்க, ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
அதனால் இந்த படத்தை இந்தியாவைத் தாண்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதனால் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இந்தியா தாண்டியும் ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த படங்களில் ஆறு கதாநாயகிகளில் ஒருவராக பாக்யரூ போர்ஸ் நடிக்கும் நிலையில் அவர் படம் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளது. முக்கியமானக் காட்சிகளில் நிறைய VFX பணிகள் செய்யப்படவுள்ளன. அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன. ” எனக் கூறியுள்ளார்.