துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் அபிநய். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ஜங்ஷன் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்காததால் அவருக்கு மார்க்கெட் போனது. எனவே ஓரிரு காட்சிகளில் வரும் நடிகராகவும் மாறினார். ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் இல்லாமல் போனது.
அம்மாவும் இறந்துவிட்ட நிலையில் வாழ்வதற்காக வீட்டில் இருந்த ஏசி உள்ளிட்ட பல பொருட்களையும் விற்று விட்டதாக ஊடகங்களில் பேட்டி கொடுத்தார் அபிநய். ஒருபக்கம் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஒருகட்டத்தில் நோய் முற்றியதால் உடல் மெலிந்து உருவமே மாறினார். தனக்கு உதவ வேண்டும் என அவர் கோரிக்க வைக்க் தனுஷ், kpy பாலா போன்றவர்கள் இவருக்கு பண உதவி செய்தார்கள். இருந்தாலும் நேற்று அதிகாலை அவர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், இரவே அவரின் உயிர் பிரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அபிநய் இறந்த பின்னரும் அவருக்கான இறுதி சடங்கை செய்ய அவரின் உறவினர்கள் யாரும் முன் வரவில்லை. அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இதை கேள்விப்பட்டு அங்கே சென்ற KPY பாலா நேற்று காலை முதல் மாலை வரை அங்கே இருந்து இறுதிச் சடங்குகளுக்கான பணிகளை செய்து வந்தார்.
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் அங்கு சென்று அபிநய் இறுதி செலவுக்கு உதவி செய்கிறேன் என முன்வந்த போது இது என் கடமை நான் செய்கிறேன்.. நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம் என சொல்லி அவரை தடுத்து விட்டார் கே.பி.ஒய் பாலா. அவரின் இந்த செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.