Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் பாலாவின் ஒரிஜினல் முகமா.. எவ்ளோ வன்மம்? - KPY பாலா வெளியிட்ட வீடியோ!

Advertiesment
KPY Bala

Prasanth K

, வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (15:15 IST)

சமீபத்தில் காந்தி கண்ணாடி மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து விளக்கமளித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று புகழ்பெற்றவர் பாலா. நகைச்சுவையாளராக மட்டுமல்லாமல் சமூக சேவகராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாலா ஆதரவற்றவர்களுக்கான உதவி, ஆம்புலன்ஸ் உதவி என பல உதவிகளை செய்துள்ளார். சமீபத்தில் ஒரு சிறு க்ளினிக்கையும் இலவசமாக திறந்து வைத்துள்ளார் பாலா.

 

இந்நிலையில் பாலாவுக்கு வெளிநாடுகளை சேர்ந்த சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பணம் வருவதாகவும், இதற்கு முன் பாலா செய்த உதவிகள் விளம்பரத்திற்காக சித்தரிக்கப்பட்டவை என்றும் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட, அது சமூக வலைதளம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து வீடியோ பேசி வெளியிட்ட பாலா “நான் சர்வதேச கைக்கூலியெல்லாம் கிடையாது, சாதாரண தினக்கூலி. இரவு பகலாக உழைத்து நான் சம்பாதித்த பணத்தில் என்னால் முடிந்த உதவியை ஏழைகளுக்கு செய்கிறேன். ஒரே ஒரு படம் ஹீரோவாக நடித்தேன். அதை பொறுக்க முடியாமல் இவ்வளவு வன்மத்துடன் சிலர் செயல்படுகிறார்கள். தூற்றுவார் தூற்றட்டும். நான் என்னாலான உதவிகளை செய்வதை நிறுத்த மாட்டேன்” என பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோவும் சோசியல் மீடியாக்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கிளாமர் லுக்கில் அசத்தும் ஸ்ரேயா!