ஹாலிவுட்டில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் டாம் க்ரூஸ். தொடக்கத்தில் அனைத்து விதமானப் படங்களிலும் நடித்து வந்த டாம் க்ரூஸ் தற்போது ஆக்ஷன் படங்களில் மட்டும் அதிகளவில் நடித்து வருகிறார்.
தற்போது 64 வயதாகும் டாம் க்ரூஸ், ஹாலிவுட்டின் லேட்ட்ஸ்ட் சென்சேஷன் நடிகையான அனா டி அர்மாஸை டேட் செய்வதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தற்போது 37 வயதாகிறது. கியூபாவைப் பூர்வீகமாகக் கொண்ட அனா நாக் நாக், நைவ்ஸ் அவுட் உள்ளிட்ட ஹிட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இவர்களின் காதல் திருமணம் வரை சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அவர்களின் திருமணம் விண்வெளியில் நடக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விமானத்தில் இருந்து குதித்த ஸ்கூபா டைவிங் செய்தபடி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படி மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருந்த அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் ஒன்பது மாத காதல் வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.