Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல மாடல் அழகியை திருமணம் செய்த ஹாலிவுட் நடிகை! 7 ஆண்டுகளாக ஓரின காதல்!

Advertiesment
chloe mortez actress

Prasanth K

, செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (12:03 IST)

7 ஆண்டுகளாக ஓரின காதலில் ஈடுபட்டிருந்த பிரபல ஹாலிவுட் நடிகை தனது காதலியை கரம்பிடித்துள்ளார்.

 

உலகம் முழுவதும் தற்போது ஓரின காதல் திருமணங்களுக்கு ஆங்காங்கே பலரும் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஓரின காதல் ஹாலிவுட் வரையிலும் பரவியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் Chloe Grace Mortez. கிக் ஆஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் ஒரு ஓரின ஈர்ப்பாளர்.

 

இவரும் கேட் ஹாரிசன் என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கேட் ஹாரிசன் தற்போது பிரபல மாடலாக இருந்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் சுற்றம் நட்பு சூழ இவர்களது திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்தை ரசிகர்கள் பலரும் வாழ்த்தியுள்ள நிலையில், ஓரின காதல் எதிர்பாளர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்திரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பார்த்திபன்?