பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்இன்று ரிலீஸாகிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்ட அரசியலை கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையோடு இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸாக இருந்தாலும் பைசன் படத்துக்குப் பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸுக்கு முன்பே திரைப்படத்தைப் பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
அவரது முகநூல் பதிவில் “#Bison திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.
படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி
Dhruv Vikram உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பைசன் - காளமாடன் வெல்லட்டும்!” என வாழ்த்தியுள்ளார்.