Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படி ஒரு Worst பிக்பாஸ் ஷோ நடந்ததில்ல! கோபமான விஜய் சேதுபதி! - இன்னைக்கு நடக்கப் போற சம்பவம்!

Advertiesment
Vijay sethupathi

Prasanth K

, ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (10:15 IST)

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியது முதலே மற்ற சீசன்களை விட மோசமான பெயரை பெற்று வருகிறது. சுவாரஸ்யமான டாஸ்க்குகளை கொடுத்தாலும் கூட அதை சரியாக திட்டமிட்டு விளையாட தெரியாமல் தொடர்ந்து சண்டை போட்டு சொதப்பி வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

 

கடந்த வாரம் ஜூஸ் டாஸ்க் பரபரப்பாக நடந்தாலும் கூட யார் யாரையாவது தாக்கி விடுவார்களோ என்ற பயத்தோடே பார்க்க வேண்டியிருந்தது. இதை நேற்றைய எபிசோடில் நேரடியாகவே சொன்ன விஜய் சேதுபதி, இதற்கான தண்டனையாக ஹவுஸ்மேட்ஸை பாகற்காய் ஜூஸை குடிக்க வைத்தார்.

 

மேலும் வன்முறையாக நடந்து கொண்டது குறித்து தைரியசாலி என கிண்டலாக அவர் கேள்வி கேட்க அதையும் புரிந்து கொள்ளாத ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு பிடித்தவர்களை தைரியசாலிகள் என சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் வன்முறையில் இறங்கிய கலையரசன், ஆதிரை, கம்ருதீன் போன்றவர்களை விஜய் சேதுபதி கடுமையாக கண்டிப்பார் என பார்த்தால் நேற்று அப்படி எதுவும் நடக்கவில்லை.

 

ஆனால் இன்று அதற்கு பதிலாக டபுள் எவிக்‌ஷன் நடக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி தனித்தனியாக அவர்கள் தவறுகளுக்கு கண்டிக்க வேண்டும் என ஆடியன்ஸ் எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல இன்றைய முதல் ப்ரோமோவில் பாருவை போட்டு பொளக்கிறார் விஜய் சேதுபதி.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!... பைசன் படத்தைப் பாராட்டிய முதல்வர்!