பிக்பாஸ் சீசன் 9-ன் பரபரப்பான மூன்றாவது வாரம் சண்டை, சச்சரவுகளுக்கு குறைவில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் காமெடி கண்டெண்டுகள் வழங்கிக் கொண்டிருந்த வாட்டர்மெலன் திவாகர் - கானா வினோத் காம்போ இந்த வாரம் சண்டை காம்போவாக மாறியுள்ளது.
வாட்டர்மெலன் திவாகருடன் சபரிநாதன், எஃப்ஜே எல்லாம் நட்பானது முதலாகவே விஜே பாரு - திவாகர் இடையேயான அண்ணன், தங்கச்சி உறவில் விரிசல் விழுந்துவிட்டது. இதனால் சமீபமாக விஜே பாருவோடு கம்ருதீன், கானா வினோத்திற்கு நட்பு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஜூஸ் டாஸ்க்கில் விஜே பாரு ஜூஸ் ஓனரான ரம்யா ஜோவை ஜெயிக்க வைத்து நாமினேஷன் ப்ரீ பாஸை பெற முயற்சி செய்தார்.
ஆனால் வாட்டர்மெலன் திவாகர் உள்ளே கலைத்து ஆடியதில் சுபிக்ஷா வெற்றி பெற்றார். சுபிக்ஷாவிடமும் பார்வதி டீல் பேசியிருந்த நிலையில் வெற்றி பெற்றதும், பாருவை முதுகில் குத்திவிட்டார் சுபிக்ஷா. இதனால் திவாகர் - பாரு இடையே பஞ்சாயத்து எழ அதில் உள்ளே புகுந்த கம்ருதீனும், கானா வினோத்தும் வாட்டர்மெலனை மோசமாக பேசியதால் வாட்டர்மெலன் திவாகர் மூன்று பேரிடமும் கடுமையாக சண்டை போட்டார். இதனால் வரும் வாரங்களில் நட்பு கூட்டணி மாறுவதுடன் ஆட்டமும் வேறு மாதிரியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K