பிக்பாஸ் வீட்டில் ஜூஸ் டாஸ்க்கில் வன்முறை வெடித்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் ஜூஸ் டாஸ்க்கில் பரபரப்பு எழுந்துள்ளது. நேற்று தொடங்கிய ஜூஸ் டாஸ்க்கில் பார்வதி, வாட்டர்மெலன் திவாகர் குவாலிட்டி செக்கர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் பாட்டில் விற்பவர்களாகவும், லக்ஸரி ஹவுஸை சேர்ந்தவர்கள் ஜூஸ் தயாரிக்கும் ஓனர்களாகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
நேற்று ஆளுக்கொரு ஃப்ளேவரில் ஜூஸ் செய்துக் கொண்டு வந்த நிலையில் பாருவும், திவாகரும் அதில் ஒன்றிரண்டு பாட்டில்களை மட்டுமே செலக்ட் செய்தனர். மீத பாட்டில்களை ரிஜெக்ட் செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் நடைபெற்ற ஜூஸ் டாஸ்க்கில் ஏன் என் ஜூஸை ரிஜெக்ட் செய்கிறீர்கள்? என கேட்டு ஆதிரை பாருவுடன் சண்டைக்கு செல்ல வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் ஆதிரை கடுப்பாகி தனது ஜூஸ் பாட்டில்களை தானே போட்டு உடைத்து, டேபிளை தட்டிவிட, அகோரி கலையரசனும் ஆத்திரமாக டேபிளை உதைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த வேண்டிய வீட்டு தலயான கனி, அவரும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டு நியாயமாக நடக்காவிட்டால் வன்முறை வெடிக்கும் என பேசியதும் ப்ரோமோவில் வந்துள்ளது. இதனால் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K