பிரபல தமிழ் இசையமைப்பாளரான தேவாவிற்கு ஆஸ்திரேலியாவில் பாராளுமன்றத்தில் மரியாதை அளிக்கப்பட்டது வைரலாகியுள்ளது.
90ஸ் கிட்ஸ் மத்தியில் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் அளவுக்கு பிரபலமானவர் தேனிசை தென்றல் தேவா. கானா பாடல்களால் பலரையும் கவர்ந்த தேவா, அந்த எல்லையை தாண்டி காதல் பாடல்கள், வெஸ்டர்ன் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். இன்றளவும் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் தேவாவை ஆஸ்திரேலியா அழைத்து அந்நாட்டு பாராளுமன்றத்தின் அவைத்தலைவர் இருக்கையில் செங்கோலுடன் அமர செய்து பெருமைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நெகிழ்ந்து பேசிய தேவா “இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் உள்ள இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய இசைக்கலைஞருக்கும் சொந்தமானது. இந்த அங்கீகாரத்தை எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் அன்பும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு சமர்பிக்கிறேன். அவர்கள்தான் என் பலம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K