Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்?

Advertiesment
Ravichandran Ashwin

vinoth

, புதன், 24 செப்டம்பர் 2025 (10:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாடிய அவர் சில வாரங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வும் பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீசனில்தான் அவர் தாய் அணியான சி எஸ் கே அணிக்குத் திரும்பியிருந்தார். ஆனால் அணி அவரை எல்லா போட்டிகளிலும் பயன்படுத்தவில்லை. அதனால் இனிமேல் தனக்கு ஐபிஎல் தொடரில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஸ்வின் ஆஸ்திரேலியாவின் டி 20 லீக் தொடரான பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் வெளிநாட்டு தொடர்களில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவில்தான் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பாரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!