தமிழ் சினிமாவில் பெண் சிவாஜி என்று பலராலும் அழைக்கப்பட்டவர் நம்முடைய ஆச்சி மனோரமா. அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜிக்கு இணையாக போற்றப்பட்ட மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் மனோரமா. சரோஜாதேவி ஜெயலலிதா பத்மினி பானுமதி என எண்ணற்ற பல நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு இணையாகவும் மதிக்கப்பட்ட ஒரு நடிகையாகவும் இருந்தார் மனோரமா.
சினிமா உலகில் ஐந்து முதலமைச்சர்களுடன் பணிபுரிந்த ஒரே நடிகையும் மனோரமா தான். அறிஞர் அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா என்.டி.ஆர் ஆகிய ஐவருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் மனோரமா. அது மட்டுமல்ல எம்ஜிஆர் சிவாஜி தொடங்கி ரஜினி கமல் விஜய் அஜித் பிரபு சத்யராஜ் என பல தலைமுறைகளுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்.
சினிமா உலகில் இவருக்கு என தனி மரியாதையும் அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது. ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் மனோரமா. இப்படி திரை உலகில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார் மனோரமா. அவருடைய திருமணம் காதல் திருமணம் தான். காதலித்து திருமணம் செய்து கொண்டு சொற்ப நாளிலேயே அவருடைய கணவர் மனோரமாவை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இடைப்பட்ட காலத்தில் மனோரமா கர்ப்பமாக அந்த நேரம் ஒரு ஜோசியர் வந்து மனோரமாவின் கணவரிடம் இந்த குழந்தை பிறந்தால் உங்களுடைய உயிருக்கே ஆபத்து என சொல்லிவிட்டாராம். அவ்வளவுதான் மனோரமாவின் ஒரே மகன் பூபதி பிறந்த அந்த பத்தாவது மாதத்தில் அவருடைய கணவர் மனோரமாவை விட்டு சென்று விட்டார். அப்பொழுது போனவர் தான் அதன் பிறகு மனோரமாவை தேடி வரவே இல்லை.
அதிலிருந்து மனோரமாவும் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய ஒரே மகனான பூபதிக்காகவே தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். கணவன் ஒரு பக்கம் அவரை விட்டு பிரிந்தாலும் மகனின் ஆதரவாவது மனோரமாவுக்கு கிடைக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. பெரும்பாலும் அவருடைய மகனாலேயே மனோரமா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
தினந்தோறும் குடித்துக் கொண்டே தான் இருப்பாராம். கடைசி வரை போராட்டம் போராட்டம் என்று தான் அவருடைய வாழ்க்கையே இருந்திருக்கிறது. இதைப்பற்றி நெருக்கமானவர்களிடம் மிகவும் வருத்தப்பட்டும் பேசியிருக்கிறார் மனோரமா. இந்த ஒரு தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளர் செந்தில் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.