தமிழ் திரையுலகில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய பிரபலங்களின் மரணங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் ஆகியோர் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனோரமாவின் மகனான பூபதி உடல்நல குறைவால் காலமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தேவாவுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்த 'சபேஷ் - முரளி' இரட்டையர்களில் ஒருவரான சபேஷ் காலமானார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு மரணங்களும், திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இருவரது மறைவுக்கும் திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.