சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாத நிலையில், இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான சர்புதீன் என்பவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்டாம்ஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் இன்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சர்புதீன் நடத்திய போதை விருந்தில் சினிமா பிரபலங்கள் பங்கேற்றார்களா? என காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பிரபலங்களுக்கு அவர் கஞ்சா சப்ளை செய்தாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.