Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் தாய்லாந்து செல்லும் சூர்யாவின் கங்குவா படக்குழு!

விரைவில் தாய்லாந்து செல்லும் சூர்யாவின் கங்குவா படக்குழு!
, ஞாயிறு, 30 ஜூலை 2023 (08:12 IST)
சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. அதையடுத்து நேற்று மாலை முதல் லுக் போஸ்டரும் ரிலீஸ் ஆனது. சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் கொடைக்கானலில் சமீபத்தில் முக்கியமானப் பலக்காட்சிகளை படக்குழு எடுத்து முடித்தது. இதையடுத்து அடுத்த கட்ட காட்சிகள் தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக படக்குழு விரைவில் தாய்லாந்து செல்ல உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கும் டாப்ஸி… நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரி எண்ட்ரி!