Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் கங்குவா படத்தில் இவர்தான் வில்லனா… படப்பிடிப்பில் இணைந்த பிரபல ஹீரோ!

சூர்யாவின் கங்குவா படத்தில் இவர்தான் வில்லனா… படப்பிடிப்பில் இணைந்த பிரபல ஹீரோ!
, வியாழன், 20 ஜூலை 2023 (07:59 IST)
சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் நடித்து வரும் நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது கொடைக்கானலில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதி 2 படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் பாத்திரம்… தயாரிப்பாளரின் ஆசை!