சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நேற்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் படத்தின் தலைப்பு பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குனர் சிவா. அதுபற்றி அவர் “கங்கு என்றால் நெருப்பு. நெருப்பின் மகன் என்ற அர்த்தம் வரும் வகையில் கங்குவா என்று தலைப்பு வைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.