Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கும் டாப்ஸி… நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரி எண்ட்ரி!

Advertiesment
சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கும் டாப்ஸி… நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரி எண்ட்ரி!
, ஞாயிறு, 30 ஜூலை 2023 (08:08 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

டாப்ஸி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் ஏலியன் என்ற தமிழ்ப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதை அவரே சமீபத்தில் ரசிகர்களுடன் உடனான உரையாடலில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அறிவியல் புனைகதையாக உருவாகும் இந்த படத்தை அருள்நிதியின் K13 படத்தை இயக்கிய இயக்குனர் பரத் நீலகண்டன் என்பவர் இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவிதாலயா தயாரிப்பில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் லக்கி சூப்பர் ஸ்டார்!