Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் பெஸ்ட் கங்குவாதான்… எதிர்பார்ப்பை எகிறவைத்த மதன் கார்க்கி!

சூர்யாவின் பெஸ்ட் கங்குவாதான்… எதிர்பார்ப்பை எகிறவைத்த மதன் கார்க்கி!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:09 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி சமூகவலைதளத்தில் ரசிகர்களோடு உரையாடும் போது படம் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் “இது புனைவுக்கதை. சூர்யாவின் சிறந்த நடிப்பு கங்குவா- ஆக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். படத்தில் நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 43 படத்தில் நடிக்கிறேனா? துல்கர் சல்மான் அளித்த பதில்!