Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா 43 படத்தில் நடிக்கிறேனா? துல்கர் சல்மான் அளித்த பதில்!

சூர்யா 43 படத்தில் நடிக்கிறேனா? துல்கர் சல்மான் அளித்த பதில்!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:04 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மானிடம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் “நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் ஆச்சர்யப்படவைப்பவை. சூர்யா 43 பற்றி அந்த படத்தின்  தயாரிப்பாளர்கள்தான் அறிவிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கேப்டன் மில்லர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!