நடிகர் சூர்யா நடிக்கும் 'கருப்பு' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ஜெயிலர் 2' திரைப்படம் அதே தேதியில் வெளியாக திட்டமிட்டிருப்பதால், 'கருப்பு' படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
முன்னதாக கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் 2 வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொங்கலுக்கு தள்ளிப்போனது. ஆனால் பொங்கலுக்கு ஜனநாயகன் வருவதால் ஏப்ரலுக்கு தள்ளிப்போனது. இப்போது ஏப்ரலில் ஜெயிலர் 2 வருவதால் இன்னும் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் கருப்பு படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில் திட்டமிட்ட 105 கோடியில் இருந்து 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனாலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு சூர்யாவின் உறவினராக இருப்பதால், பட்ஜெட் உயர்வு குறித்து அவர் வெளிப்படையாக பேச தயங்குவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, 'கருப்பு' படத்திற்கான பின்னணி இசை வேலைகள் ஏற்கனவே சாய்பங்கர் மூலம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.