தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனராகவும், திரைப்பட கல்லூரியில் இயக்குனராகம் பணியாற்றி வந்தவர் பணியற்றியவர் கே.எஸ் நாராயண சுவாமி இவரை கே.எஸ் கோபாலி என சுருக்கமாக அழைப்பார்கள். இவருக்கு வயது 92. இன்று அவர் காலமானார்.
பூனே திரைப்பட கல்லூரியில் சிறந்த மாணவராக இருந்த கோபால் நடிப்பில் டாக்டர் பட்டமும் பெற்றார். இந்திய சினிமாவில் ரஜினி, அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ராதாரவி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் இவர்தான். நடிகர் ரஜினி சென்னை திரைப்பட கல்லூரியில் படித்தபோது அவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
இவருக்கு ரஜினி மீது அளவில்லாத அன்பு உண்டு. இவர்தான் கே.பாலச்சந்தரிடம் ரஜினியை அறிமுகப்படுத்தி அவருக்கு வாய்ப்பு கேட்டார். எனவே, கோபாலி மீது ரஜினி மிகப்பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
கோபாலி மரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் ரஜினி சென்னை மந்தவெளியில் உள்ள அவரின் வீட்டுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.