ரஜினியின் நண்பர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதும் சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால்தான் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. செய்தியாளர் சந்திப்பில் கமலும் இதை உறுதி செய்தார். என் நட்சத்திரத்திற்கு கதை படிக்கும் வரை பல இயக்குனர்களிடமும் கதை கேட்பேன் என்பது போல அவரும் சொல்லியிருந்தார்.
ஒருபக்கம், ரஜினி 173வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் ரஜினியின் புதிய படத்தை தனுஷ் இயக்கப் போகிறார் என்கிற செய்தி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. பல ஊடகங்களும் இதை செய்தியாக வெளியிட்டது
.
தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதோடு ரஜினியின் முன்னாள் மருமகனும் கூட. எனவே இது சாத்தியம்தான் என பலரும் நினைத்தார்கள். ஆனால், இதில் உண்மையில்லை. முழுக்க முழுக்க வதந்தி என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
தனது மகள் ஐஸ்வர்யாவை பிரிந்தபின்னர் தனுஷுடன் பேசுவதையே ரஜினி நிறுத்திவிட்டார் என்பதுதான் உண்மை. தனுஷ் ரசிகர்கள் சிலர் இப்படி கொளுத்தி போட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.