Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

Advertiesment
Rajini

Bala

, சனி, 8 நவம்பர் 2025 (11:37 IST)
இப்போதும் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி. இப்போதும் ஜெயிலர் 2 போன்ற 600 கோடிக்கு மேல் வசூல் செய்யும் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். கூலி படத்திற்கு பின் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைய இருக்கிறது. அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. அந்த திரைப்படம் 2027 ஜனவரி பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா திடீரென உடல்நலம் குறைவு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே அவரின் அவரை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் தற்போது பெங்களூர் பயணம் மேற்கொண்டுள்ளார். செய்தி கேட்டவுடன் ரஜினி சென்னையிலிருந்து விமானத்தில் அங்கு சென்று கொண்டிருக்கிறார்.
 
சத்ய நாராயணா ரஜினிக்கு பக்கபலமாக இருந்தவர். ரஜினி பற்றிய பல விஷயங்களை அவரின் செய்தி தொடர்பாளர் போல நிருபர்களிடம் பேசி வந்தார். ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்தபோது ரஜினி நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து செய்தியாளிடம் பேசியது இவர்தான்.
 
ரஜினியின் அப்பா இறந்தபின்னர் அவர் இடத்திலிருந்து ரஜினியை வழிநடத்தியது சத்யநாராயணன்தான். இவரின் உடல்நலம் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...