Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கர்கள் கண்டிப்பாக ஆடுகளம் படத்தைப் பார்க்கவேண்டும்… பரிந்துரை செய்த ராஜமௌலி!

அமெரிக்கர்கள் கண்டிப்பாக ஆடுகளம் படத்தைப் பார்க்கவேண்டும்… பரிந்துரை செய்த ராஜமௌலி!
, சனி, 25 பிப்ரவரி 2023 (07:36 IST)
ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் எண்டிஆர், ராம்சரண் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்த இந்த படம் தற்போது கோல்டன் க்ளோப், ஆஸ்கர் உள்ளிட்ட பல உலக விருது விழாக்களில் போட்டியிட்டு வருகிறது. சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட ஹாலிவுட் இயக்குனர்கள் ராஜமௌலியை பாராட்டியுள்ளனர்.

அதில் ராஜமௌலியுடன் ஜேம்ஸ் கேமரூன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை கண்டு தான் வியந்ததாக ஜேம்ஸ் கேமரூன் சொல்ல, அவரது மனைவி ‘இவர் அந்த படத்தை முதன்முறையாக பார்த்தபோது குழந்தையை போல உணர்ந்தார். தொடர்ந்து இரண்டு முறை படத்தை பார்த்தார்” என்று கூறுகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியுயார்க்கர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் ராஜமௌலி அமெரிக்கர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இந்திய படங்கள் ஐந்தைப் பட்டியலிட்டுள்ளார். அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த 7 ஹீரோக்களுக்கு மட்டும்தான் முன்னுரிமையா? திடீர்னு கை விரிக்கும் ஓடிடி நிறுவனங்கள்