Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயசானாலும் ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்ல..! – ஜாக்கிச்சானின் “ரைட் ஆன்” ட்ரெய்லர்!

Advertiesment
Ride On
, புதன், 8 பிப்ரவரி 2023 (11:16 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள “ரைடு ஆன்” படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹாங்காங் சினிமாவில் தோன்றி உலகம் முழுவதும் பிரபலமடைந்து ஹாலிவுட் வரை தன் கால் தடத்தை பதித்தவர் ஜாக்கிச்சான். 90ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகனான ஜாக்கிச்சானுக்கு வயது 68. ஆனாலும் சளைக்காமல் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் அவர் நடித்து வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹாங்காங் சினிமாக்களில் ட்ராகன் லார்டு, ட்ரங்கன் ட்ராகன், ப்ராஜெக்ட் ஏ உள்ளிட்ட படங்களில் நடித்தபோதும், ஹாலிவுட்டில் ராப் பி ஹூட், ஃபாரினர், வான்கார்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தபோதும் சரி ஆக்‌ஷனுக்கு பஞ்சம் வைத்ததே இல்லை ஜாக்கிச்சான்.

தற்போது “ரைட் ஆன்” படத்தின் மூலமாக குதிரை ஒன்றுடன் அடுத்த அதிரடி காமெடி ஆக்‌ஷனில் களம் இறங்கியுள்ளார் ஜாக்கிச்சான். சினிமாவில் இருந்து விலகிய சண்டை பயிற்சியாளர் ஜாக்கியும், அவரது குதிரையும் செய்யும் சாகசங்கள்தான் இந்த “ரைட் ஆன்” படம். இந்த படம் ஏப்ரல் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கருணாஸ் மகள் திருமணம்.. மாப்பிள்ளை ஹேண்ட்ஸமா இருக்றேப்பா!