Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட்டில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

vinoth
புதன், 18 ஜூன் 2025 (09:55 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆக்ஸ்ட் மாத மத்தியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்துக்குத் தந்தை வேடத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனைக் காரணமாக தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்சேபத்துக்குரியக் காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்… மனுஷி படம் குறித்து சென்சார் வாரியம் பதில்!

ஒரே காரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. மும்பையில் டேட்டிங் சென்றார்களா?

சண்முக பாண்டியன் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும்… தேமுதிக நிர்வாகிகள் விருப்பம்!

இனி அமேசான் ப்ரைம் தளத்திலும் விளம்பரங்கள்… பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி!

‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments