Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

Advertiesment
அமீர்கான்

vinoth

, வியாழன், 12 ஜூன் 2025 (14:07 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கான் ஹிட் கொடுத்து சில ஆண்டுகள் ஆகிறது. அவரின் அண்மைய இரண்டு திரைப்படங்களான ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ மற்றும் ‘லால் சிங் சத்தா’ ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக தோல்விப் படங்களாக அமைந்தன.

இதையடுத்து அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள "சித்தாரே ஜமீன் பர்" திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கியிருப்பவர் பிரசன்னா என்பவர். இவர் தமிழில் "கல்யாண சமையல் சாதம்" படத்தை இயக்கியவர்.

ஆமிர்கான் இயக்கத்தில் வெளியான ‘தாரே ஜமீன் பார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கூடைப்பந்து அணி ஒன்றை உருவாக்கி, அதை போட்டியில் வெற்றிபெற வைக்கு பயிற்சியாளராக அமீர்கான் இந்த படத்தில் நடித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!