சிம்பு –ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகவிருந்த ‘சிம்பு 49’ என்ன ஆச்சு?

vinoth
புதன், 18 ஜூன் 2025 (09:49 IST)
சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான தக் லைஃப் படம் தோல்விப் படமாக அமைந்தது. சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் ஜூன் மாதம் தொடங்கும் என சிம்பு தெரிவித்திருந்தார். கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியதால் இந்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போதைக்கு இந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சிம்பு வெற்றிமாறன் படம்தான் அவரின் 49 ஆவது படமாக வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments