Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடகர் அருணா சாய்ராமுக்கு ''செவாலியே விருது'' அறிவிப்பு

Advertiesment
arun sairam
, செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:05 IST)
மும்பையைச் சேர்ந்த கர்நாடக பாடகர் அருணா சாய்ராமுக்கு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கர்நாடக இசைப்பாடகரும்  இசையமைப்பாளருமான அருணா சாய்ராம், கண்ணனும் கந்தனும், ஊத்துக்காடு வைபவம், ஹரியும் ஹரனும் உள்ளிட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இவரது  கர்நாடக இசைக்கச்சேரி அறிவிக்கப்பட்டதுமே இருக்கைகள் முன்பதிவு விற்றுத் தீர்ந்துவிடும் அளவு இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக  கர் நாடக இசைத்துறையில் உள்ள இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளா,பத்ம ஸ்ரீ, சங்கீத் நாடக அகாதமி விருது,  தமிழக அரசின் கலைமாமணி  விருது, அமெரிக்க அரசின் காங்கிரஸின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் இவர்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் உயர விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே, இசைத்துறையில் பிரபலங்கள், நட்சத்திரங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக் கான் படத்தை இயக்கும் கேப்பில் சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?