பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறினார். இதனால் அவர் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கியுள்ள நிலையில், குறைந்த நாட்களிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஜி பி முத்து. ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.
வெளியேறிய பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இப்போது அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து செல்ல பேச்சுவார்த்தை நட்ப்பதாகவும், அதற்கு ஜி பி முத்து சம்மதித்து மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.