பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறினார். இதற்கு, எஸ்வி சேகர், கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார் என்று அவரை பாராட்டியுள்ளார்.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த வாரம் 12 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் அவர்களில் சாந்தி உள்பட 4 பேரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி குறைந்த வாக்குகள் பெற்ற சாந்தி வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. சக போட்டியாளர்களுக்கு உப்புமா மட்டுமே சமைத்து கொண்டிருந்த சாந்தி வெளியேற்றப்பட்டதால் இனி நல்ல சாப்பாடு கிடைக்கலாம்
இருப்பினும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு வயதான போட்டியாளர் முதல் நபராக வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில், நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஜிபி, முத்து பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், நீ சங்கியா என கேலி பேசப்பட்டவர், 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணத்தைவிட, தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசமே மேல் என நிரூபித்து, கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார் என்று பதிவிட்டுள்ளார்.