Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருதுநகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'

Advertiesment
pfi
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (09:42 IST)
விருதுநகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'
இந்தியாவில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு மத்திய அரசு சமீபத்தில் 5 ஆண்டுகாலம் தடை விதித்தது என்பது தெரிந்ததே. 
 
இதனையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகரில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விருதுநகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு இந்த அமைப்புக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த அமைப்பின் அனைத்து அலுவலகங்களுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
அந்த வகையில் விருதுநகரில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி செய்துவிட்டு சென்ற நிலையில் அந்த அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்!